செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பாளர்கள் அரசுக்கு சொந்தமான சுமார் 56 ஏக்கர் நிலத்தில் 75% நிலத்திற்கு மேலாக சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த இடத்தில் ஓர் பகுதியை எலப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்து குப்பை கொட்டிவந்தது. இத்தருணத்தில், இரு தினங்களுக்கு முன்னர் எலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அருந்ததிபாளையம் (ஈச்சங்காடு) பகுதியில் கிராம ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு ஆக்கிரமிப்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவருடன் பல ஆக்கிரமிப்பாளர்கள் சேர்ந்து கொண்டு தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் அராஜகத்தினால்தான் குப்பை கொட்டப்படுகிறது எனவும், தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை அறிந்து அச்சிறுபாக்கம் ஒன்றிய குழுத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும், புகார் அளித்த நபரிடம் நிலத்திற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டபோது உரிய ஆவணங்களை அவர் அளிக்கவில்லை. மேலும், ஊராட்சிமன்ற தலைவர் யாரிடமும் அராஜக செயலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது.
பின்னர், கிராம நிர்வாக அலுவலக வரைபடத்தின்படி, குப்பை கொட்டப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என்பது உறுதியானது. இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பிரச்சனையின் காரணமாக அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை டிராக்டர் மூலமாக எடுத்து தற்காலிகமாக எலப்பாக்கத்தில் கொட்டப்பட்டது. பின்பு குப்பை அள்ளிய இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இரவோடு இரவாக ஏர் உழுதுள்ளனர். இது தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் நில அளவையர் ஆகியோர் நிலத்தை அளந்து அரசு புறம்போக்கு இடத்தினை அரசு மட்டுமே பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அறிவிப்பு பலகை வைக்கப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
எனவே, நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் அரசாணைப்படி, நீர்நிலை புறம்போக்கு நிலமோ அல்லது எந்த வகையிலான புறம்போக்கு இடமாக இருந்தாலும் முழுமையாக ஊராட்சி நிர்வாகத்தின் வசம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், 25 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களின் நிலை என்ன என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தொடர்புடைய செய்தி:
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
அச்சிறுபாக்கம் ஒன்றிய செய்திகள்
முந்தைய அச்சிறுபாக்கம் ஒன்றிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
சினிமா செய்திகள்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment