வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எலப்பாக்கத்தில் குப்பைத் தொட்டியாக மாறிவரும் பஞ்சாயத்து அலுவலகம் - துர்நாற்றம், நோய்பரவலால் மக்கள் பாதிப்பு.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 25, 2021

எலப்பாக்கத்தில் குப்பைத் தொட்டியாக மாறிவரும் பஞ்சாயத்து அலுவலகம் - துர்நாற்றம், நோய்பரவலால் மக்கள் பாதிப்பு.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சியில் பொது இடத்தில் குப்பை கொட்டியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எலப்பாக்கம் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பகுதியில் துர்நாற்றத்துடன் கூடிய வரவேற்பாக இந்த குப்பை கொட்டுமிடம் மாறியுள்ளது. 


தற்போது தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு டெங்கு பாதிப்பு, ஒமிக்ரான் பரவலை தடுத்தல், கொரோனா பாதிப்புகளை தடுத்தல் என பல்வேறு பணிகளில் முழு வீச்சுடன் சிறப்பாக ஈடுபட்டுள்ளது.

ஆனால், தி.மு.க- ஊராட்சி மன்ற தலைவர் உள்ள ஓர் ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பகுதியே இப்படி நோய்பரவல் உற்பத்தியின் கூடாராமாக மாறி உள்ளதே என்பதால் பொதுமக்கள் பலர் ஊராட்சிமன்ற தலைவர் தலைவரின் கணவரும், தி.மு.க கிளைச் செயலாளருமான கோவிந்தராஜிடம் கேள்வி எழுப்பினர்.



பின்னர் இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், 

"எலப்பாக்கம் ஊராட்சியை முதல்நிலை ஊராட்சியாக தராமாக மாற்றுவதே எனது நோக்கம் எனவும், எங்கள் கழகத் தலைவர், தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சிக்கு எந்தவித அவப்பெயரும் வராமல் காப்பதே எனது நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்."

பின்பு எதற்காக, ஓர் பொது இடத்தில், அதுவும் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் எதிரிலேயே இப்படி குப்பையை கொட்டியுள்ளீர்கள்..? அது மட்டுமல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது, அலுவலகத்தின் பின்புறத்தில் குளம் உள்ளது, அலுவலகத்தின் அக்கம்பக்கத்தில் பால் உற்பத்தி நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.? இப்படி உள்ள இடத்தில் எதற்காக மாசு ஏற்படுத்தி நோய் பரவலை ஏற்படுத்தும் விதமாக குப்பை கொட்டியுள்ளீர்கள் என எலப்பாக்கம் வாழ் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு அவர் பதில் கூறுகையில்,

"எலப்பாக்கம் ஊராட்சிக்கு என சுமார் 56 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. ஆனால் அந்த இடமானது எலப்பாக்கம் ஊராட்சியின் குக்கிராமமான அருந்ததிபாளையம் (ஈச்சங்காடு) எனுமிடத்தில் மொத்தமாக உள்ளது. தற்போது அப்பகுதியில்தான் குப்பைகளை கொட்டி வருகிறோம். இதற்கு முன்னர் எலப்பாக்கம் சுடுகாடு அருகே உள்ள இடத்தில் தனி அலுவலர்களால் இடம் தேர்வு செய்யப்பட்டு குப்பை கொட்டப்பட்டு வந்தது.


ஆனால், அங்கு போதுமான இடம் இல்லாத காரணத்தினாலும், அந்த இடத்தில் சுடுகாட்டிற்கு வருபவர்களுக்கு நோய்பரவல் ஏற்படுவதாகவும், குப்பைகளை கொட்டி எரிக்கும்போது பட்டா நிலத்தில் வீடு கட்டியுள்ள அனைவருமே மூச்சுத்தினரல், தலைவலி, மயக்கத்தினால் கடும் பாதிப்புக்குள்ளானதாகவும், இதனாலேயே அருந்ததிபாளையம் (ஈச்சங்காடு) பகுதியில் எலப்பாக்கம் கிராம ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தினை தேர்வு செய்து அங்கு குப்பை கொட்டிவந்ததாகவும் கூறினார்.
"

அருந்ததியர்பாளையம் பகுதியில் தற்போது குப்பை கொட்டிவரும் இடத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து சிலர் விவசாயம் செய்தல் மற்றும் வீடு கட்டி வந்துள்ளதாகவும், அந்த இடத்திற்கு சற்று தள்ளியே குப்பை கொட்டிவருவதாகவும் அவர் கூறினார்.


ஆனால், தற்போது அருந்ததிபாளையம் பகுதி மக்கள் குப்பை கொட்டுவதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தி.மு.க. தலைமையிலான மக்கள் பிரதிநிதிகளை சட்டத்திற்கு புறம்பாக குற்றம் சாட்டுவதாகவும், இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுலவர், வட்டாட்சியர், ஒன்றிய குழுத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு அருந்ததிபாளையம் பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பாடாமல், ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்து ஊராட்சி இடத்தினை ஊராட்சியின் பொதுத் தேவைகளுக்கு பயன்படும் வகையில் மாற்றுவேன். 

ஆக்கிரமிப்புகளை மீட்பதே கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் குறிக்கோலும் என பதிலளித்தார்.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறின்றி குப்பை கொட்டுவதற்கான இடமானது ஓரிரு தினங்களில் முறையாக தேர்வு செய்யப்படுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அச்சிறுபாக்கம் ஒன்றிய செய்திகள் 


முந்தைய அச்சிறுபாக்கம் ஒன்றிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment