ஹரியானா மாநிலம் குருகிரமில் உள்ள சிறிய வீட்டில் முதியவர் சுரேஷ் சாஹூ, அவரது மனைவி மற்றும் 3 மகன்கள் இரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென்று பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது.
பின் அங்கு கிடந்த துணிகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. இந்த விபத்தில் சுரேஷ் சாஹூ உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகன்களும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், முதியவர் வாகனத்தை வாங்கி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. அவர் வீட்டிற்குள் ஸ்கூட்டரை சார்ஜ் செய்துக்கொண்டிருந்தபோது பேட்டரி வெடித்து தீ பரவியிருக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment