பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து டி.ஒய்.எஃப்.ஐ மற்றும் அனைத்து சங்கங்களின் சார்பில் 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கவும் சிஐடியூ சார்பில் அனைத்து வாகன ஓட்டிகளும் 10 நிமிடம் வாகனத்தை நிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் 4 பகுதிகள் தேர்வு செய்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகரம், திருப்பெரும்புதூர், குன்றத்தூர், படப்பை உள்பட பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10 நிமிடம் வாகனம் நிறுத்த போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 10 நிமிட வாகன நிறுத்த போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சங்கர், சிஐடியு மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம்-காஞ்சிபுரம் மண்டலத்தின் பொது செயலாளர் பி.சினிவாசன்,
தேநீர் கடைகள் சங்க நிர்வாகி இ.சம்பத், ஓய்வு பெற்ற ஆசிரியர் வேணுகோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment