கோவையில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மினிடோர் டிரைவர், போக்சோவில் கைது.
கோவையில் பத்தாம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது மினிடோர் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார், பெரிய நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த மினிடோர் ஓட்டுநர் வெள்ளைச்சாமி என்பவரை, துடியலூர் அனைத்து மகளீர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர், கோவை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் 10 ம் வகுப்பு பயின்று வருகிறார்.
பெற்றோர்கள் செங்கல் காலவாயில், தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாகவும், தானும் தனது தம்பியும் கோவையில் மாணவர் விடுதியில் தங்கியிருந்து பள்ளியில் பயின்று வருவதாகவும் தன்னுடன் மாணவர் விடுதியில், 7 பேர் தங்கி பயின்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலை 9. 15, மணிக்கு நடந்து, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது தனக்கு பின்னால் வந்த நபர் தன்னிடம் பேச்சுக் கொடுத்து தனது பெயரை கேட்டதாகவும், தான் தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்று கூறிக் கொண்டு தனக்கு வாட்ஜ் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, இந்த பகுதிகளை சுத்திப் பார்க்கலாம் வா, என்று தன்னை அழைத்து கொண்டு அந்த பகுதியில் பேசிக்கொண்டே சென்றதாகவும், காலை சுமார் 11 மணிக்கு தனியார் பேக்கரி கடை முன்பு தன்னை அழைத்து பாலியல் ரீதியாக தன்னை தொந்தரவு செய்ததாகவும், நான் அப்படியெல்லாம் செய்யாதீங்க என்று சத்தம் போட்டுக் கொண்டு வெளியே வந்து விட்டதாகவும், மேலும் நடந்தவற்றை நான் எனது பள்ளியின் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து, தனது தந்தைக்கு தகவல் சொல்லி நேற்று தனது தந்தையுடன் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான வெள்ளைச்சாமி என்பவரை, துடியலூர் அனைத்து மகளீர் காவல்துறையினர் போக்சோ வழக்காக பதிவு செய்து, வெள்ளைச்சாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment