தஞ்சாவூர் மாவட்டம் நாட்டாணி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (41). ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்த இவருக்கு மருங்கை பகுதியைச் சேர்ந்த சுதாகர் (27), அசூரமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (32) ஆகியோர் நண்பர்கள் ஆவார்.
இவர்கள் மூவரும் சேர்ந்து கும்பகோணம் நோக்கி சென்றுள்ளனர். அங்குள்ள நெடுஞ்சாலையோரமாக வாகனங்களை பார்க் செய்து விட்டு, செண்டர்மீடியனில் அமர்ந்து மது அருந்த தொடங்கியுள்ளனர்.
அந்நேரத்தில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது செண்டர் மீடியனில் இருந்த மூவர் மீது ஏறி, அவர்கள் சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மீது மோதி நின்றது.
நொடிப் பொழுதில் நடந்து விட்ட இந்த கோர விபத்தில் நண்பர்கள் பிரசாந்த், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். லாரியை ஓட்டி வந்த நபர் தப்பித்து ஓடிவிட்டார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து அவசர ஊர்திகளை வரவழைத்து மூவரின் உடல்களையும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment