இராமநாதபுரம் ஓம்சக்திநகர் 11-வது தெருவை சேர்ந்தவர் சவுமியா (25) பி.இ. பட்டதாரியான இவர் அரசுப்பணி தேர்வுக்கு தயாராகி வந்தார். இவரும் ராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சேக் முகம்மது என்ற அபுவும் (27) காதலித்து வந்தனர்.
இதற்கிடையே இவர்களின் திருமணத்துக்கு முதலில் சம்மதம் தெரிவித்த சேக் முகம்மதுவின் பெற்றோர், பின்னர் சவுமியா அழகாக இல்லை, வரதட்சணை அதிகம் தர வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டார்களாம். சவுமியாவிடம் நெருக்கமாக பழகிய அபுவும் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சவுமியா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக சவுமியா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அதில், தனது தற்கொலைக்கு சேக் முகம்மது மற்றும் அவருடைய பெற்றோர், திருப்பூரில் உள்ள மாமா ஆகியோர்தான் காரணம் என்றும், மேலும் பல்வேறு தகவல்களையும் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள சேக் முகம்மது உள்ளிட்டோரை போலீசார் தேடிவருகின்றனர்.
No comments:
Post a Comment