வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வியாழக்கிழமைகளில் இதை மட்டும் செய்து பாருங்க!! எடுத்த காரியத்தில் வெற்றி தான்!! | Do it in Thursday | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 09, 2021

வியாழக்கிழமைகளில் இதை மட்டும் செய்து பாருங்க!! எடுத்த காரியத்தில் வெற்றி தான்!! | Do it in Thursday | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

ஒவ்வொரு கிழமைக்கும் நமக்கு ப்ரியமான கடவுளை வழிபடுகிறோம். ஆனால், நம் பிள்ளைகள் அறிவில், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க ஒவ்வொரு வியாழக்கிழமையும் இவரை வழிபட மறக்காதீங்க.


வியாழக்கிழமை வழிபாடு என்றாலே நம்மில் பலரும் நவகிரக சன்னதிக்கு சென்று குரு பகவானை வழிபடுகிறோம். ஆனால், வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபட மறந்து விடுகிறோம். ஞானத்துக்கு அதிபதி இவர் தான். சிவபெருமானின் யோக வடிவம் தான் இந்த தட்சிணாமூர்த்தி. பிறைசூடிய தெய்வங்கள் அனைத்துமே சிவபெருமானை பிரதிபலிப்பவை தான் என்கின்றன ஆகம விதிமுறைகள்.


சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் மனதை பாதிக்கும். தடைகளை களைந்து இடையூறுகளை ஒதுக்கி தள்ளி சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிக மிக அவசியம்.இவற்றில் முதல் வடிவமாக சொல்லப்படுவது அமைதியே உருவான தென்முகக்கடவுளான தட்சணாமூர்த்தி ரூபம். 

கடைசி வடிவமாக வழிபடப் படும் சிவ வடிவம் பைரவர். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையோடு தான் சிவனை வழிபட வேண்டும். அந்த் வகையில் பெரும்பாலும் அனைத்து சிவ ஆலயங்களிலும் தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள்பாலிப்பர்.


தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் இரு வடிவங்களும் தமது தலையில் மூன்றாம் பிறையை சூடியவர்கள். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவரை வழிபடும் முறைகள் மிக மிக எளிது.

இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் வந்து சேரும். கர்மவினைகள் படிப்படியாக நீங்கி மனம் அமைதி பெறும். எண்ணிய யாவும் ஈடேறும். ஞானகுருவாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வோம். வாழ்வில் வெற்றியையும், மனதில் அமைதியையும் பெறுவோம்.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment