காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகின்றார்.
இவரது மகன் முத்து நெசவு தொழில் செய்து வந்துள்ளார். மாற்றுத் திறனாளியான இவர் தனது 2 மனைவிகள், மகன்கள், மகள்களுடன் உபரி நீர் வெளியேறுவதை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அனைவரும் ஏரியில் குளிக்க விரும்பி உள்ளனர். எனவே முத்து அவர்களை அழைத்துக்கொண்டு குளிக்க இறங்கியுள்ளார்.
அப்போது கால் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலை வேளையில் வெளிச்சம் இல்லாத காரணத்தினால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மறுநாள் காலை தேடும் பணி தொடங்குவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment