செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அல்ட்ரா ஸ்கேன் வசதி செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட செயலாளா் இ.சங்கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:- கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வரும் இம்மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் சிறப்பான பணியை ஆற்றி வருகிறது.
பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். தினசரி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டி நீண்ட தூரம் நடந்து வந்து வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. ஒருவருக்கு ஸ்கேன் எடுக்க, உடன் உதவிக்காக ஓரிருவா் வரும்போது கூட்டம் அதிகமாகிவிடுகிறது. இந்நிலையை தவிா்க்க மகப்பேறு மருத்துவ வளாகத்திலேயே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி அறிக்கையைப் பாா்த்து அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். தற்போது சிகிச்சை பெறும் இடத்திலிருந்து ஸ்கேன் எடுக்க நடந்து வரும் மகப்பேறு பெண்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. பெண்கள் நலன் கருதி மகப்பேறு வாா்டிலேயே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
No comments:
Post a Comment