செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பாக்கம் என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுகன் என்ற இளைஞர் படாளம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று வழக்கம் போல கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் மாணவன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் உடலை கைப்பற்றிய போலீஸின் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment