ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, கல்லூரி மாணவியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் தமிழக ராணுவ வீர்கள் உட்பட 4 பேரை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
கன்னியாகுமரி அருமனை பகுதியைச் சேர்ந்த பி.காம் மாணவி (19) , அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ. 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர், கடன் பெற முயற்சித்த போது மேல்பாலையைச் சேர்ந்த சஜித் (30) என்பவர் கல்லூரி மாணவிக்கு அறிமுகமாகியுள்ளார். இவர் ராணுவ வீரராக உள்ளார்.
வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் என அவர்களுடைய பழக்கம் நீண்டது. மாணவியின் கஷ்டத்துக்கு உதவி செய்வதாக கூறிய சஜித், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக மாணவியை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்துக் கொண்ட அவர், பலமுறை அதை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் தனது நண்பர்களுக்கும் மாணவியின் வீடியோவை பகிர்ந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து ஆசைக்கு இணங்குமாறு சஜித் கூறியதை அடுத்து மார்த்தாண்டாம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன் பேரில் சஜித், ஜான் பிரிட்டோ, கிரீஷ், லிபின் ஜான் (32) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் நான்கு பேரும் தலைமறைவாகினர். இதில் சஜித் மற்றும் கிரிஷ் இருவரும் ராணுவ வீரர்கள் என்பதால் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தனியாக நடந்து வருகிறது. தலைமறைவானவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment