வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பேருந்து பயணத்தில் தவறி விழுந்த மாணவன்: ஒட்டுமொத்தமாக வரவழைத்து அறிவுரை வழங்கிய ஆட்சியர்! | Collector Meeting about School Student Travel | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

பேருந்து பயணத்தில் தவறி விழுந்த மாணவன்: ஒட்டுமொத்தமாக வரவழைத்து அறிவுரை வழங்கிய ஆட்சியர்! | Collector Meeting about School Student Travel | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்கள் நின்றவாறும், தொங்கியவாறும் பயணம் செய்தால் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை பணி நீக்கம் செய்து அந்த பணியில் வேறு ஒருவர் அமர்த்தப்படுவர்.


வேலூர் மாநகருக்குட்பட்ட காட்பாடியில் இருந்து பாகாயம் வரை செல்லும் அரசு நகர பேருந்து தொரப்பாடியை கடந்து பாகாயம் நோக்கி செல்லும் போது அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பயணித்துள்ளனர். அப்போது பேருந்தின் பின் பக்க படிக்கட்டில் தொங்கியவாறு சென்ற ஒரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீரென பேருந்தில் இருந்து கை விலகி சாலையில் விழுந்துள்ளார். பேருந்து மெதுவாக சென்றதால் கீழே விழுந்த மாணவனுக்கு சிறுகாயங்கள் மட்டும் ஏற்பட்டு பெறும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.


இதனை பார்த்த அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைத்த மாணவனுக்கு உதவி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இச்சம்பவத்தை தங்களது செல்போனிலும் வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். மேலும் அந்த வீடியோவில், பேருந்தில் தொங்கியபடி செல்லும் மாணவர்களால் அந்த பேருந்தே சாய்ந்துவிடுவது போல உள்ளது. மேலும் பல மாணவர்கள் பேருந்து பின்னாடியே ஓடியும், தங்களது காலணிகளை தவறவிட்டும் செல்வது பதிவாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோருக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை வரும் காலங்களில் தடுக்கும் பொருட்டும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும். பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி முதல்வர், அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை அழைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார். 


இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர்  குமாரவேல் பாண்டியன் பேசுகையில், பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்கள் நின்றவாறும், தொங்கியவாறும் பயணம் செய்தால் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை பணி நீக்கம் செய்து அந்த பணியில் வேறு ஒருவர் அமர்த்தப்படுவர்.  மேலும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இனி வரும் காலங்களில் மாணவர்கள் இது போன்று உயிரை பணயம் வைத்து தொங்கிய படி பேருந்தில் பயணம் செய்ய கூடாது என அறிவுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்து தவறி விழுந்த மாணவர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டாட்சியர்கள், அனைத்து டிஎஸ்பிக்கள், உதவி மாவட்ட கல்வி அலுவலகள், தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


கொரோனா ஊரடங்கில் பள்ளி கல்லூரிகள் திறக்க தளர்வு அளிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக காலை, மாலை நேரங்களில் தனியார் மற்றும் அரசு பேருந்தின் படிக்கட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்து வருவது தொடர்கதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment