சினிமாவில் ஒப்பனை கலைஞர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணத்தையும் வாங்கி ஏமாற்றிய மேக்கப் ஆர்டிஸ்ட் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்பவரை சேரநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
சினிமா படப்பிடிப்பு தளங்களுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் உள்ள லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று சுரேஷ்குமார் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பெண்ணிடம் இருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவான மேக்கப் ஆர்டிஸ்டை கைது செய்தனர்.
No comments:
Post a Comment