காஞ்சிபுரத்தை அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் செர்ரி பழம் சாகுபடி செய்து பட்டதாரி விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார்.
இது புளிப்பு வகை செர்ரி பழம் ஆகும். இந்த புளிப்பு செர்ரி பழம் சாகுபடி குறித்து, வழக்கறிஞரும் பட்டதாரி விவசாயுமான வி.அனந்தராமன் தெரிவிக்கையில்: தோட்டத்தில், பல வித பழச்செடிகள் மற்றும் அரிய வகை மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறேன்.
அந்த வரிசையில், செர்ரி பழச்செடியையும் நான் நட்டு பராமரித்து வருகிறேன். நெல்லிக்காய் வடிவத்தில் இந்த பழம் இருக்கிறது. தற்போது இதில் காய் காய்க்க துவங்கியுள்ளது. லேசான புளிப்பு மற்றும் இனிப்பு சுவை உள்ள இந்த பழத்தில், வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. தற்போது, நாங்கள் சொந்த உபயோகத்திற்கு இந்த பழத்தை பயன்படுத்துகிறோம். மலை மற்றும் குளிர் பிரதேசங்களில் விளையும் செர்ரி பழம், நமது பகுதி களி மண்ணிலும் அருமையாக வளர்க்கிறது. இதில் வருவாய் ஈட்டுவது குறித்து, இனி தான் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment