வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அகிலி, எலப்பாக்கம், மோகல்வாடி, தண்டலம் பகுதிகளில் இருளர்களுக்கு பூமிகா டிரஸ்ட் வழங்கிய நிவாரணப் பொருட்கள் | Chennai Bhoomika Trust Giving Flood Relief | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 08, 2021

அகிலி, எலப்பாக்கம், மோகல்வாடி, தண்டலம் பகுதிகளில் இருளர்களுக்கு பூமிகா டிரஸ்ட் வழங்கிய நிவாரணப் பொருட்கள் | Chennai Bhoomika Trust Giving Flood Relief | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News



செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி, மோகல்வாடி, சேனியர்மேடு (தண்டலம்), பின்னப்பூண்டி வெள்ளைக்குளம் (எலப்பாக்கம்) ஆகிய பகுதிகளில் வசிக்கும் 85 இருளர் குடும்பங்களுக்கு சென்னை பூமிகா தொண்டு நிறுவனம் சார்பாக நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் அருணா சுப்பிரமணியம் அவர்களின் அறிவுறுத்தலின்படி மழைகால வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.


15 நாட்களுக்கு தேவையான அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட 20 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட்டின் நிறுவனர் தோமினிக் மற்றும்
சமூக ஆர்வலர்கள் வினாயகமூர்த்தி, லீமா ரோஸ், சுனில், பழனிவேல் பாலாஜி, தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பூமிகா டிரஸ்டின் கள அதிகாரி ரீகன் அவர்களால் வழங்கப்பட்டது.


சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் பூமிகா தொண்டு நிறுவனத்தின் மூலமாக தண்டலம் சேனியர்மேடு பகுதியில் 2015-ம் ஆண்டு வெள்ளம் பாதித்தபோது இருளர்களுக்கு வீடு கட்டிதரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment