தமிழகத்தின் குன்னூர் அருகே விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில், விமானப்படை தளபதி இன்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து வந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நேற்றிரவு ஆய்வ மேற்கொண்டனர். அப்போது, காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டியை டெல்லி அல்லது பெங்களூருவுக்கு கொண்டுசென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment