சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார்.
சமூக வலைத்தளங்களில் காஷ்மீருடன் ஒப்பிட்டு தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பியதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டதாகவும் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனின் அளுநரை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாஜக நிர்வாகியான கல்யாணராமன், யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்டவர்களின் கைது விவகாரம் குறித்து ஆளுநரிடம் பேசியதாக பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ள அண்ணாமலை, 'தமிழக ஆளுநர் மதிப்புக்குரிய ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்களுடன் சென்று சந்தித்தேன். நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக் கொண்டு இருக்கும் திமுக அரசனுடைய போக்கை கண்டித்து அறிக்கையாக சமர்பித்தோம்' என பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment