வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பைக்கை எவ்வாறெல்லாம் மாடிஃபை செய்ய அனுமதி உண்டு? என்ஜினில் கை வைக்கும்முன் இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 24, 2021

பைக்கை எவ்வாறெல்லாம் மாடிஃபை செய்ய அனுமதி உண்டு? என்ஜினில் கை வைக்கும்முன் இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

விருப்பத்திற்கு ஏற்ப மோட்டார்சைக்கிளை மாடிஃபை செய்து பயன்படுத்துவது நம்மில் பெரும்பாலானோர்க்கு மிகவும் பிடித்திருக்கும். ஒரு பைக் அறிமுகமான உடனே அதனை எப்படியெல்லாம் மாடிஃபை செய்யலாம் என்பதுதான் நம் மனதில் வந்து செல்லும். சிலருக்கு பைக்கின் தோற்றத்தை மாற்றினாலே போதும்.


ஆனால் சிலரோ பைக்கில் சில கூடுதல் வசதிகளை சேர்க்கவும், பைக்கின் செயல்திறனை மேம்படுத்தவும் விரும்புவர். ஆனால் சில பைக் மாடிஃபிகேஷன்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையான அனுமதியை பெற வேண்டும். அத்தகைய மாடிஃபிகேஷன்கள் என்னென்ன? எவ்வாறு அனுமதி பெற வேண்டும்? முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வாகன மாடிஃபிகேஷன்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பிற்கு பிறகு, எல்லா பைக் மாடிஃபிகேஷன்களும் ஆர்டிஓ-வால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆர்டிஓ-விடம் அனுமதி பெறமால் சில மாடிஃபிகேஷன்களை மேற்கொண்டிருந்தால், அது உங்களை மிக பெரிய தொகையை அபராதமாக செலுத்த வைக்கக்கூடும்.

இவ்வளவு ஏன், சில மாடிஃபிகேஷன்களுக்கு உரிமையாளர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி கூட வரலாம். பயப்பட வேண்டாம், எந்தெந்த மாடிஃபிகேஷன்களை செய்ய அனுமதி உண்டு என்பதை இனி பார்க்கலாம். நீங்கள் உங்கள் பைக்கில் என்ஜின் அடித்தட்டை சேர்ப்பது/மாற்றுவது, பின்பக்க முனை பகுதியை சிறியதாக்கி கொள்வது, டிகால்கள், விஸர்கள் & விங்லெட்களை சேர்ப்பது போன்ற சிறிய அளவிலான மாடிஃபிகேஷன்களை மேற்கொள்ளலாம்.

இத்தகைய மாடிஃபிகேஷன்கள் பைக்கின் செயல்திறனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆதலால் இவை ஆர்டிஓ-வால் தாரளமாக அனுமதிக்கப்படுகின்றன. இவற்றுடன் உரிமையாளர் பைக்கின் டயர்களை மாற்றி கொள்ளலாம் என்பது ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே உள்ள மாடிஃபிகேஷன் என்பதால், டயர்களை மாற்ற நிச்சயமாக யாரும் பயப்பட மாட்டீர்கள்.

ஆனால் உண்மையில் பைக் ஒன்றின் டயர்களை அதன் ஒரிஜினல் அளவில் தான் மாற்ற வேண்டும். வழக்கத்தை காட்டிலும் சிறிய அளவிலான டயர்களினாலோ, அல்லது அளவில் பெரிய டயர்களினாலோ மாற்றுவது விபத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் இத்தகைய டயர் மாடிஃபிகேஷனிற்கு அரசு அனுமதியளிப்பதில்லை. இவ்வாறு பொருந்ததாக டயர்களை பைக்கில் பொருத்தினால் அது சட்டத்திற்கு விரோதமானது ஆகும்.

பைக்கின் என்ஜினை மாற்றுவதில் தான் பல கெடுப்பிடிகள் உள்ளன. உங்களது பைக்கின் என்ஜின் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு முற்றிலுமாக பழுதாகினால், அதனை மாற்றி கொள்ளலாம். ஆனால் மாற்றிய பின்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டியது அவசியமாகும்.

என்ஜினை மாற்றினால் கிட்டத்தட்ட அந்த பைக்கினை மீண்டும் ஆர்டிஓ-வில் மறுபதிவு செய்வது போன்றுதான் ஆகும். என்ஜின் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச அற்றல் அளவுகள் மற்றும் வெளியிடும் காற்று மாசு அளவு உள்ளிட்டவை அனைத்து ஒரிஜினல் என்ஜினிற்கு இணையானதாக இருக்க வேண்டும். இதனால் அதே மாடலின் என்ஜினை பொருத்துவதே அந்த பைக்கினை மீண்டும் முறையான அனுமதி உடன் பயன்படுத்துவதற்கு ஒரே வழியாகும்.

மற்றப்படி, பைக் மட்டுமில்லாமல் எந்தவொரு வாகனத்தின் பெயிண்ட்டையும் உரிமையாளர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் என நீதிமன்றமே கடந்த ஆண்டில் தீர்ப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையோ இழிவுப்படுத்துவது போன்றதான பெயிண்ட்கள் உங்களை சட்ட சிக்கல்களுக்கு உள்ளாக்கலாம். ஆதலால் பைக்கின் பெயிண்ட்டை மாற்றினாலும் ஆர்டிஒ-விடம் இருந்து முறையான அனுமதியை பெற்றுவிடுவது நல்லது.

அதனை எவ்வாறு பெறுவது என்பதை படிப்படியாக இனி பார்ப்போம்.

நிலை 1: முதலில், நீங்கள் ஆர்சி புத்தகத்துடன், பைக்கிற்கு கொடுக்க உள்ள நிறத்தின் மாதிரியையும், வண்ண குறியீட்டையும் எடுத்துக்கொண்டு, பைக்கை பதிவு செய்த ஆர்டிஓ அலுவலத்திற்கு செல்ல வேண்டும்.

நிலை 2: பைக்கின் நிறத்தை மாடிஃபிகேஷன் செய்தவதற்கான அனுமதியை பெறுவதற்கு என்றே NAVM விண்ணப்பம் உள்ளது.

அதனை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின் சிறிது நேரம் காத்திருந்து பைக் நிற மாடிஃபிகேஷனிற்கான வட்டார போக்குவரத்து அலுவலரின் கையொப்பமிடப்பட்ட கடிதனை பெற வேண்டும்.

நிலை 3: உங்கள் பைக்கின் நிறத்தை சரியான முறையில் மாற்றியமைக்கும், அங்கீகரிக்கப்பட்ட பட்டறைக்கு செல்லவும். இந்த மாடிஃபிகேஷனில் அந்த பட்டறை தரமான பெயிண்ட் அல்லது வ்ராப்-ஐ தான் பயன்படுத்துகிறார்களா என்பது உறுதிப்படுத்தி கொள்ளல் வேண்டும்.

ஆர்டிஓ-வால் அனுமதியளிக்கப்பட்ட நிறமும், நீங்கள் உங்கள் பைக்கிற்கு புதியதாக கொடுக்கப்பட உள்ள நிறமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

நிலை 4: பணிமனையில் இந்த செயல்முறைகள் அனைத்தும் முடிந்ததும், உங்கள் வாகனத்தை மீண்டும் அனுமதி கடிதத்துடன் ஆர்டிஓ-விற்கு எடுத்து செல்லுங்கள். அங்கு சென்றவுடன் உங்களது ஆர்சி புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையினை கட்டணமாக பெற்று கொள்வார்கள். அவ்வளவுதான்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

பொது தகவல் செய்திகள் 


முந்தைய பொது தகவல் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment