செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அவுரிமேடு ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் ஓணம்பாக்கம் குரு வட்டத்திற்குட்பட்ட அவுரிமேடு, சித்திரவாடி, சிறுநல்லூர், உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்முகாம் நடத்தப்பட்டது.
குறிப்பாக யூ.டி.ஆர் திருத்தம், புலஎண் மற்றும் உட்பிரிவு எண் தவறாக இருப்பின் திருத்தம் பட்டாதாரர் பெயர் மாற்றம், தந்தை பாதுகாவலர் பெயர் பிழை திருத்தம், உறவுமுறைகளில் திருத்தம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் சான்று, திருமண உதவித்தொகை வழங்கபட்டு பொதுமக்களிடம் 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிகழ்வில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம் துரைராஜ், ஒன்றியக்குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் கீதா, ஒன்றியக்குழு உறுப்பினர் வே.கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறுநல்லூர் ஜி.டி.எம் தெய்வசிகாமணி, அவுரிமேடு கலாஅரி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிறுநல்லூர் பாலாஜி, அவுரிமேடு வினோத்குமார், ஊராட்சி செயலர்கள் சிறுநல்லூர் மாதவிதேவி, அவுரிமேடு சுதர்சனன், கிராம உதவியாளர்கள் ஏழுமலை, மணி, கோதண்டம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
மதுராந்தகம் வட்டார செய்திகள்
முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment