காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுநதரம் தலைமையில், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசலிக்கு கலால் வரி வழங்கிடவும் வெள்ள நிவாரணம் வழங்கிடவும் உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பி திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் பழனி, மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில் ராஜன், தேவராட்சாயினி சுந்தரராஜன் , ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களகாட்டூர் ராஜி, அக்ரி நாகராஜ் , அத்திவாக்கம் ரமேஷ் , பிரகாஷ் பாபு , தங்க பஞ்சாட்சரம் , தருமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment