நடிகை நயன்தாரா மற்றும் டாக்டர் ரெனிதா ராஜன் ஆகியோரின் லிப் பாம் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய லிப் பாம் காலெக்ஷனை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக சுழன்று வரும் நடிகை நயன்தாரா தற்போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். மேலும், நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தற்போது கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘பிக்பாஸ்’ கவின் நடிக்கும் ஊர் குருவி படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.
இந்தநிலையில், படங்களை தயாரிக்கும் முயற்சியை தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாரா, புகழ்பெற்ற தோல் மருத்துவரான டாக்டர் ரெனிதா ராஜனுடன் இணைந்து அண்டர் தி லேபிள் என்ற லிப் பாம் கம்பெனியை தொடங்கியுள்ளார். இதன்மூலம், நயன்தாரா அழகு சாதன விற்பனை பிஸினெஸுக்குள் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த புதிய லிப் பாம் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய லிப் பாம் காலெக்ஷன் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரின் தினசரி உதட்டுப் பராமரிப்பு வழக்கத்தில் மக்களை கவரும் வகையில் 100 க்கு அதிகமான லிப் பாம்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
A venture from Nayanthara with Dr. Renita Rajan. And yes good things take time 👄 THE LIP BALM COMPANY #NayantharaTLBC pic.twitter.com/vPc0gHZxlA
— Nayanthara✨ (@NayantharaU) December 10, 2021
பெண்களை தொடர்ந்து அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நயன்தாராவின் முயற்சியானது பாலின-நடுநிலை தயாரிப்புகளில் கவனம் செலுத்தி அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.
நிறுவனத்தின் தொடக்க விழாவில் பேசிய நயன்தாரா, அழகு சாதனப் பொருட்கள் விஷயத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை என்றும், அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்புக்காகத் தான் பார்க்கிறேன் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய ஆக்கப்பூர்வமான தயாரிப்புகள் குறித்து குழு பெருமிதம் கொள்கிறது. இந்த தயாரிப்புகள் அசாதாரணமான ஒன்றைத் தேடும் நபர்களிடம் இது எதிரொலிக்கும் என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து டாக்டர் ரெனிதா ராஜன் கூறுகையில், “உணர்திறன் வாய்ந்த உதடுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் சரியான லிப் பாம் உருவாக்கும் திட்டமாகத் தொடங்கப்பட்ட திட்டம் இது. தற்போது இது ஒரு முழுமையான தயாரிப்பு வரிசையில் உயர்ந்துள்ளது. உதடுகளை மென்மையாக்கவும், பிரகாசமாகவும், மென்மையாக்கவும் மட்டும் லிப் பாம்கள் பயன்படுத்தப்படுவதில்லை. சுவாரஸ்யமான நரம்பியல் அழகுசாதனப் பொருட்கள் ஆரோக்கிய உணர்வைத் தருவதோடு, மனநிலையை மேம்படுத்தும் என்றார்.
மேலும், இந்த லிப் பாம்கள் உதடுகளின் பண்புகளை மேம்படுத்தும் மூளை இரசாயனங்களை உருவாக்குகின்றன. லிப் பாம் பயன்படுத்துவது அன்றாட ஆரோக்கியமான பழக்கமாகும், எங்கள் லிப் பாம் இன்றியமையாத தினசரி பழக்கமாக மக்களிடம் மாறும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment