நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். தேசிய விருது வாங்கும் அளவுக்கு திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகையாகவும் மாறிவிட்டார். தற்போது அவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் மராக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
அந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை, அதை சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி மிகவும் தகாத வார்த்தைகளில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மர்ம நபர். அது மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் கவனத்திற்கு வந்திருக்கிறது. அவர் கீர்த்தி சுரேஷ் அப்பா தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கு இதுபற்றி தெரிவித்திருக்கிறார். அவர் உடனே திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment