செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் 1962 ஆம் ஆண்டு கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் தினசரி நாளிதழ் படிக்க வரும் வாசகர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். நூல் இரவல் வாசகர்கள் 3650 பேர் உள்ளனர். இந்த நூலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 2021, நவம்பர் மாதம் வரை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.
50 ஆண்டு காலமாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்திற்கு என்று சொந்த கட்டிடம் ஒன்று கட்டித்தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதன் பின்னர், கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதிகளின் மறு வரையறை செய்தனர். அப்பொழுது அச்சரப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மதுராந்தகத்தில் சேர்க்கப்பட்டு மதுராந்தகம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. மதுராந்தகம் தொகுதிக்கான தனியாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஏற்கனவே இருந்தது.
அச்சிறுபாக்கத்தில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இப்பகுதி மக்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற, மற்றும் மாவட்ட ஆட்சியரின் முழு முயற்சியால் இந்த கட்டணம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆணைக்குழு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு நூலக ஆணைக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்த அந்த கட்டிடம் முழுமையாக வர்ணம் பூசி நூலகத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது.
அதன் பின்னர், தற்பொழுது அச்சரப்பாக்கம் நடுத்தெருவில் இயங்கிவந்த கிளை நூலகம் தற்பொழுது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள அந்த சொந்த கட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment