வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 9 லட்சம் வங்கிப் பணியாளர்கள் 2வது நாளாக இன்றும் ஸ்டிரைக்!! 2nd day bank strike for 9 lakh staffs
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

9 லட்சம் வங்கிப் பணியாளர்கள் 2வது நாளாக இன்றும் ஸ்டிரைக்!! 2nd day bank strike for 9 lakh staffs

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளில், நாடு முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 


நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்காக வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 9 வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாடு தழுவிய அளவில் இரண்டுநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களது வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை தொடங்கினர். பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிக்கிளைகள் மூடப்பட்டன.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment