செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஆதிதிராவிட நலத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பு கீழ் இயங்கும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை கணக்கீடு செய்யும் பணி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை பராமரிப்பில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் 41 எண்ணிக்கையும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பழுதடைந்து உள்ள கட்டிடங்கள் 119 எண்ணிக்கையும், ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் 666 எண்ணிக்கையும் உள்ளது. மொத்தம் 826 பழுதடைந்த கட்டிடங்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆய்வு செய்யப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களில் 196 கட்டிடங்களை இடிக்க நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் 173 கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் நிலுவையில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை ஆய்வு செய்யப்பட்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment