சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி பகுதியில் வசிப்பவர் கண்ணன் (45). இவரது மனைவி ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் சொந்த மகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதனால் சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
இதை பற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். தனது கணவர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆத்தூர் மகளிர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கண்ணன் தனது மகளை பாலியல் கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment