ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 14 வயது சிறுவன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அப்போது வீட்டில் யாருமில்லை. அங்கு சிறுமியிடம் சிறுவன் அத்துமீறியுள்ளான்.
இதையடுத்து சிறுமி கூச்சலிடவே, சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி நலமாக உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment