வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காஞ்சிபுரம் அருகே 50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு பழுதடைந்த கிராம சங்கு புத்துயிர் பெற்றது.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

காஞ்சிபுரம் அருகே 50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு பழுதடைந்த கிராம சங்கு புத்துயிர் பெற்றது.!

முன்னோர்கள் காலத்தில் கிராமங்களில் விவசாயப்பணி , வெளி ஊர் சந்தை வியாபாரத்திற்கு செல்ல , கால நேரம் அறிய என பலவற்றிக்கு பெரிதும் உதவியது சங்கொலி. கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு பல கால நேரங்களில் ஒலி எழுப்பி அக்கிராமம் மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள பல கிராமங்களிலுள்ள பொதுமக்களுக்கு உதவியது.


காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சியில் கடந்த 1962-ஆம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான திரு எஸ் வி நடேச முதலியார் அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த பல வருடங்களாக உபயோகமிலலாமல் இருந்து வந்தது. அங்கு ஊர் கிராம மக்கள் பலமுறை முயற்சித்தும் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாத நிலை தொடர்ந்து இருந்து வந்தது.

தற்போது புதியதாக பொறுப்பேற்க பட்ட கிராம ஊராட்சி மன்றம் தலைவர் சுகுணாமேரி , துணைத்தலைவர் அன்பு மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் இதனை புதுப்பிக்கும் பணியை துவங்க முடிவு செய்யப்பட்டு பழுது பார்க்கும் பணி தொடங்கியது.

பணி நிறைவுற்ற நிலையில் அதை பொருத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இன்று முதல் இதன் பயன்பாடு மீண்டும் வந்துள்ளது. இந்த சங்கு ஒலியைக் கேட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து பாரம்பரிய பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடு பெரிதும் இப்பகுதிக்கு தற்போதும் பயன்படும் என தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment