நெல்லையில் கழிப்பறை சுவர் இடிந்து பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனம் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவமும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசு வழங்க வேண்டும்.' இவ்வாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment