கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்பவரது மகள் பிரித்திகா 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய சகோதரி தர்ஷினி மதிய உணவு வேளையின்போது அவரைக் காணவில்லை என தேடிவந்துள்ளார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மாணவியை பள்ளி நிர்வாகம் தேடியுள்ளனர். பள்ளியின் சமையலறை அருகில் மாணவி உடல் கருகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் கொடைக்கானல் தாண்டிக்குடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், உடனே மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மாணவி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் மாணவி உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவத்திற்கு அனைவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடன் கைது செய்து நீதியை நிலை நாட்டை வேண்டும் என கூறி வருகின்றனர்.
அதேபோல, குடும்பத்திற்கு நீதி கிடைக்க அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம். ஒரு சிறு குழந்தையை சீரழித்த கொடும் குற்றவாளிகளை காவல்துறை, நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும். மேலும், இனி இது போன்று பள்ளிகளில் தொடர்ந்து நடக்கும் பாதகங்களை, பாலியல் குற்றங்கள், கொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான சூழ்நிலையை குழந்தைகளுக்கு உருவாக்கி தரவேண்டியது அரசின் கடமை என கோரிக்கையாக தமிழக அரசுக்கு பலர் வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment