வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னுயிர் காப்போம் திட்டம் | நம்மை காக்கும் 48-னை துவக்கி வைத்தார்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 18, 2021

மேல்மருவத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னுயிர் காப்போம் திட்டம் | நம்மை காக்கும் 48-னை துவக்கி வைத்தார்.!

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னுயிர் காப்போம் | நம்மை காக்கும் 48 திட்டத்தினை துவக்கி வைத்தார்.






இந்த துவக்க நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த தமிழக முதல்வரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகர்புற தொழில் துறை அமைச்சர் கே.என். நேரு, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.வ.வேலு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, 
காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ர.வசந்தமாலா ஆகியோர் சிறப்பாக வரவேற்றனர்.


மேலும், இத்திட்டத்தின் துவக்கவிழா செங்கை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ்,
ஆகியோர் கலந்து கொண்டர். மக்களின் அடிப்படை தேவையான இந்த திட்டத்தினை துவக்க வந்துள்ள தமிழக முதல்வரை வழிநெடுங்கிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பங்காரு அடிகளார் அவர்களை தமிழக முதல்வர் சந்தித்தபோது.!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிறுவன குழுமத் தலைவர் லட்சுமி பங்காரு அவர்கள்  மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கட்டமைப்புகளை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். 

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 




திட்டத்தினை துவக்கி வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில்:

சாலை விபத்துக்களில் மிகவும் இன்றியமையாதது அவசரகால சிகிச்சை. ஒருவருக்கு விபத்து ஏற்பட்ட உடன் அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் உள்ளது. பெரும்பாலும், மாவட்ட அளவிலான மருத்துவமனைகளுக்கே சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்கின்றனர்.

ஆனால், சில நேரங்களில் பெரும் பாதிப்புகளை சந்திக்கும் ஓர் மனிதனை கோல்டன் பீரியட்(Golden Peried) என மருத்துவர்களால்கூறப்படும் நேரத்திற்குள் தலைமை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல இயலவில்லை. இதனால் உரிழப்புகள் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் அல்லது பிற தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த கோல்டன் பீரியட்டினை தாண்டியே அடிபட்டவர்களை கொண்டுசெல்ல முடிகிறது. 

இன்னுயிர் காப்போம்  (நம்மை காக்கும் 48) திட்டத்தின் சிறப்பு பிரிவு

இதனை கருத்தில் கொண்டே இன்னுயிர் காப்போம் திட்டம் (நம்மை காக்கும் 48) திட்டத்தினை செயல்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் அவசர கால சிகிச்சையை அருகில் உள்ள மருத்துவமனைகளிலேயே பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக முதல் 48 மணி நேரத்திற்கு அளிக்கப்படும் இந்த சேவையானது முற்றிலும் இலவச சேவை என்பதை மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்வதாகவும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும், பிற மாநிலத்தவர், வெளி நாட்டவர் என அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் அவசர சிகிச்சையை பெற முடியும் என்பதனையும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த திட்டத்திற்கான செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீராகும் சாலைகளும், நம்மை காக்கும் 48 மணி நேரமும், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டமும் , உதவி செய்வதுமே தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். 

இந்த திட்டத்திற்கு சாலைப் பொறியியல், வாகனப் போக்குவரத்து, காவல் துறை, மருத்துவத் துறை மற்றும் பள்ளி, கல்லூரி கல்வித் துறைகளை இணைத்து, கருத்துத் திரட்டலின் அடிப்படையில் வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டது. 

அதில், “பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய சாலைப் பாதுகாப்பு ஆணையம் (Road Safety Authority) என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சாலைப் பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிர்வாக, நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படும். சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணவும், புதிய தொழில் நுட்பத்தோடு அதனை சரிசெய்து, தொலைநோக்கு திட்டத்துடன் விபத்துகளை தவிர்ப்பதுமே இதன் முதன்மையான இலக்காகும்.

இந்த திட்டமானது இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: 

 

Related News: 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 



No comments:

Post a Comment