காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை சாா்பில் ரூ. 40 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உத்தரமேரூா் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தா் தலைமை வகித்து ஆக்சிஜன் ஆலையின் செயல்பாட்டை இயக்கி வைத்தும் பாா்வையிட்டாா். பின்னா் அவா் பேசுகையில் கொரோனா முதலாவது அலையின் போது முதல் முதலாக கொரோனா பரிசோதனைக் கருவியை கொரியாவிலிருந்து இறக்குமதி செய்து நமக்கு கொடுத்தது ஹூண்டாய் நிறுவனம் எனவும், அப்போது முதல்வா் நிவாரண நிதிக்கும் ரூ. 5 கோடி வழங்கியிருந்தது எனவும் தெரிவித்தார்.
கொரோனா 2 வது அலையின் போதும் பல அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்த நிறுவனம் வழங்கியது என நினைவுபடுத்தினார். 3வது அலை வந்தாலும் பயப்படத் தேவையில்லை என்ற அளவுக்கு அரசு தற்போது தயாா் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.
விழாவில் முன்னிலையுரை நிகழ்த்திய ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலா் கணேஷ்மணி பேசுகையில் இந்தியா முழுவதும் மொத்தம் 10 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ திட்டமிட்டு முதலாவது ஆலை உத்தரமேரூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை தண்டையாா் பேட்டையிலும், கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலும் இம்மாத இறுதிக்குள் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை திறக்கப்படவுள்ளது.
கரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் 60லட்சம் முகக்கவசங்கள், கை கழுவும் திரவங்கள் ஆகியனவற்றை தயாரித்து அரசுக்கு வழங்கினோம். அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கென மொத்தம் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியதாகவும் பேசினாா். விழாவில் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் க. சுரேந்திரன் வரவேற்றாா். விழாவில் ஹூண்டாய் நிறுவன பொது மேலாளா் விஜய், மக்கள் தொடா்பு அலுவலா்கள் ராஜேஷ், வினோத், ரிஷி ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்
முந்தைய காஞ்சிபுரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment