அந்த வகையில் ஸ்ரீநகர், டல்கேட் பகுதியில் உள்ள 1896 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளத்தையும் கிறிஸ்தவர்கள் கைவிட்டு சென்றனர். இதனால், அந்த வழிபாட்டுத்தளம் மிகுந்த சேதமடைந்தது. கடந்த சில மாதங்களாக அந்த வழிபாட்டுத்தளத்தை புனரமைக்கும் பணிகளை ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேச அரசு மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், ஸ்ரீநகர் டல்கேட்டில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளம் நேற்று பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. 1989-ல் மூடப்பட்ட இந்த மத வழிபாட்டுத்தளம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று பிரார்த்தனைகள் நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட இந்த வழிபாட்டுத்தளத்தை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
செயின் லூகா தேவாலயம் என்ற இந்த மத வழிபாட்டுத்தளத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மத மக்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம். கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த வழிபாட்டுத்தளத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கிறிஸ்தவ மதத்தினர் வரவேற்றுள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
சினிமா செய்திகள்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment