தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்ந்ததையடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.
உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. முதலில் தென்ஆப்பிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் பரவாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், நைஜீரியா Non Risk கொரோனா ஆபத்தில்லா நாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தில்லா நாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படாது. பயணிகளில் 2% பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும். ஒரு நாட்டிலிருந்து புறப்பட்டு நேரடியாக வராமல் வேறு நாடுகள் வழியாகவும் பயணித்து வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி மாதிரிகள் எடுக்கப்படும்.
அதன்படி கடந்த 10ம் தேதி இந்த நபரின் மாதிரி சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அவர் ஆபத்தில்லா நாட்டிலிருந்து வந்ததால் முடிவுகள் வரும் வரை விமான நிலையத்திலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே மாதிரி எடுக்கப்பட்டவுடன் அவர் சென்னையில் தனது வீட்டுக்கு சென்று விட்டார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. உடனே அவரை வீட்டிலிருந்து அழைத்து வந்து கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களை பரசோதனை செய்ய முடிவில் செய்யப்பட்டது. அதன்படி அவருடன் தொடர்பில் இருந்த 6 குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. எனினும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு நெகடிவ் என வந்தது.
இரண்டு நாட்கள் கழித்து அவர்களுக்கு அறிகுறிகள் தென்படவே மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் 7 பேருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்த போது அதில் S Gene Drop கண்டறியப்பட்டது. S Gene Drop என்றால் இது வரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகள் அல்லாமல் வேறு கொரோனாவாகா இருக்கலாம் என்று அர்த்தம். எனவே இந்த 7 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
மேலும், அவர்களுடன் தொடர்பு மற்றும் பயணித்தவர்களையும் சேர்த்து 89 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்தது. இவர்களில் 13 பேரின் முடிவுகளில் ஒமிக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 2வது இடத்தில் டெல்லியும் உள்ளது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சுகாதார துறை செய்திகள்
முந்தைய சுகாதார துறை செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment