ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 107 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கட்டிடம், நிலம் உள்ளிட்டவை உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே சொந்தமானது.
இந்த சொத்தை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக, ஆண்டுக்கு ஒருமுறை டிசம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றம் முழுவதும் 24 மணி நேரம் இழுத்து மூடப்படும். அனைத்து நுழைவுவாயில்களும் பூட்டப்பட்டு, உள்ளே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.
அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை, உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டு இருக்கும். இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டார்.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment