செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் கடந்த 1 ஆண்டிற்கு மேலாகவே நரிக்குறவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் தி.மு.க கொடியுடனே வளம் வந்து கொண்டிருக்கிறார்.
தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வளையல் விற்பது, மணி விற்பது என தொழிலுக்காக பல பகுதிகளுக்கு அனுதினமும் செல்லும் இவர் தனது இருசக்கர வாகனத்தில் தி.மு.க.-வின் கொடியை கட்டிக் கொண்டே வளம் வருகிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு "நான் எனக்கு கருத்து தெரிந்த காலம் முதல் தி.மு.க-வின் தீவிர தொண்டன் எனவும், தி.மு.க- அரசால் மட்டுமே எங்களை போன்ற சமுதாயத்தினர் வாழ்வாதரத்தை பாதுகாத்து முன்னேற முடியும் எனவும்" தெரிவித்தார்.
No comments:
Post a Comment