செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் குண்ணங்குளத்தூர் கிராமத்தில் உயிர் நீத்தோருக்கு காரிய சடங்குகள் செய்ய பல ஆண்டுகளாக இட வசதி இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், சென்னையில் இயங்கிவரும் "எவர்வின் பள்ளிக் குழுமம்" சார்பாக ரூ.21 லட்சம் செலவில் குண்ணங்கொளத்தூர் ஏரிக்கரையின் மேல் உயிர் நீத்தார் காரிய மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களால் திறக்கப்பட்டு குண்ணங்குளத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மண்டபத்தின் கட்டுமானம் மற்றும் உறுதித்தன்மை குறித்தும் அர்பணிப்பாளரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் குண்ணங்கொளத்தூர் கிராம பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த உயிர் நீத்தார் காரிய மண்டபத்திற்கு ஜெயம்மாள் உயிர் நீத்தார் மண்டபம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குண்ணங்கொளத்தூர் கிராமத்தில் வாழ்ந்துவந்த காலஞ்சென்ற பா.ஜெயம்மாள் என்பவரின் முதலாம் ஆண்டு நினைவாக இந்த மண்டபத்தினை அவரது மகன் புருஷோத்தமன் மற்றும் குடும்பத்தினர் கிராம பஞ்சாயத்துக்கு கட்டி அர்பணித்தனர். மேலும், ஜெயம்மாள் வாழ்ந்துவந்த இல்லத்தில் அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் மற்றும் உடனிருந்தோர் அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எவர்வின் பள்ளிக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புருஷோத்தமன் சிறப்பாக செய்திருந்தார். சென்னை கொளத்தூர், பெரம்பூர், மதுரவாயல் மற்றும் மாத்தூர் ஆகிய இடங்களில் இந்த கல்வி குழுமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
மதுராந்தகம் வட்டார செய்திகள்
முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment