இசையில் தொடங்கி சமையல் வரை எல்லா வடிவத்திலும் யூடியுப் சேனல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி இயங்கும் சேனல்களில் அதிக சந்தாதாரர்களை கொண்டிருக்கும் சேனல்களுக்கு யூடியுப் பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த சினிமா மற்றும் இசை வெளியீட்டு நிறுவனமான 'T Series' யூடியுப் சேனல் 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்ற உலகின் முதல் யூடியுப் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு T Series நிறுவனம் யூடியுப் சேனலை தொடங்கியது.
இந்த 15 ஆண்டுகளில் 383 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. மேலும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 29 சேனல்கள் உள்ளன. இதனால் ரூ. 72 கோடி வரை மாத வருமானம் ஈட்டிவருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment