வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அரசு உத்தரவு: டெலிகாம் நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு கால் ரெக்கார்ட் வைத்திருக்க உத்தரவு.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 24, 2021

அரசு உத்தரவு: டெலிகாம் நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு கால் ரெக்கார்ட் வைத்திருக்க உத்தரவு.!

தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒருங்கிணைந்த லைசன்ஸ் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு உரிமதாரர்களுக்கும் ஒரு முக்கிய ஆணையை வழங்கியுள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு நபர்களின் கால் ரெக்கார்டகளை வைத்திருக்க வேண்டும் என்று துறை உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்களின்படி, பல பாதுகாப்பு நிறுவனங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த கூடுதல் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கால் ரெக்கார்டிங் டேட்டா 18 மாதங்களுக்கு சேமிக்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு துறை, டிசம்பர் 21 தேதியிட்ட அறிவிப்பின் மூலம், அனைத்து கால் விவர ரெக்கார்டகள் , பரிமாற்ற விவரங்கள் ரெக்கார்ட்கள் மற்றும் நெட்வொர்க் தகவல் தொடர்பு ஐபி பதிவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு சேமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது பொருத்தமானது. இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு சாதாரண ஐபி விவரங்கள் ரெக்கார்ட்களுடன் கூடுதலாக "இன்டர்நெட் போன் " விவரங்களையும் பராமரிக்க வேண்டும் என்று அறிவிப்பு கூறுகிறது.

துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இது நடைமுறை உத்தரவு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெறுவதால், ஒரு வருடத்திற்குப் பிறகும் தரவு இன்னும் தேவை என்று பல பாதுகாப்பு நிறுவனங்கள் எங்களிடம் தெரிவித்தன. இந்த ஆர்டருக்காக அனைத்து சேவை வழங்குநர்களுடனும் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளோம்.

இந்த உத்தரவில், தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுபோன்ற தரவுகள் நீக்கப்படும்போதெல்லாம், அதற்கு முன்னர் அந்தத் டேட்டாக்களுடன் தொடர்புடைய அலுவலகம் மற்றும் அதிகாரி இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். தகவலை வழங்கிய அடுத்த 45 நாட்களுக்குப் பிறகு டேட்டா நீக்கப்படும்.

மற்றொரு டெலிகாம் நிறுவன அதிகாரி கூறுகையில், இந்த டேட்டாவை இரண்டு வருடங்கள் வைத்திருப்பதால் கூடுதல் செலவு ஏற்படாது, இந்த டேட்டா டெக்ஸ்ட் வடிவில் சேமிக்கப்படுவதால், அதிக இடம் தேவையில்லை. இந்தத் தரவுகளில் பெரும்பாலானவை யார் கால் செய்தார்கள் மற்றும் காலின் காலம் என்ன என்பது பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment