மத்திய இரயில்வேயில் 5/4, 3/2 நிலைப் பணிகளுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பணியாளர்களை நியமிக்க உள்ளது.
மத்திய அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. மத்திய ரயில்வே (Central Railway), ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு விளையாட்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான நிலை 5/4, 3/2 பதவிகளுக்கான மொத்தம் 21 காலிப்பணியிடபங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் RRC CR இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமானrrccr.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் (டிசம்பர் 13) தங்களின் விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம். விண்ணப்பத்தை சமர்பிக்கவேண்டிய கடைசி நாள் டிசம்பர் 27, 2021 ஆகும்.
வேலைவாய்ப்புக்காக முழு விவரம்:
நிறுவனத்தின் பெயர் : Central Railway.
பதவியின் பெயர் : Level 5/4 and Level 3/2.
காலிப்பணியிட எண்ணிக்கை : 21
வேலை வகை : மத்திய அரசு வேலை.
பணியிடம்: இந்தியா முழுவதும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி : டிசம்பர் 13, 2021.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : டிசம்பர் 27, 2021.
அதிகாரப்பூர்வ இணையதளம் : rrccr.com
Level 3/2: 18 காலியிடம்.
நிலை 5/4: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்ச பட்டப்படிப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
நிலை 3/2: விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெட்ரிகுலேஷன் பிளஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லையெனில், NCVT/SCVT ஆல் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஜனவரி 1, 2022 -யின் படி, மத்திய ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிட - https://www.rrccr.com/PDF-Files/Sports-21-22/Sports_Notif_2021_22_Eng.pdf
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டு. மேலும், அறிவிப்பின்படி தகுதியுடையவர்களுக்கு ரூ. 400 திருப்பிச் செலுத்தப்படும். SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/PWD/பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் சோதனை அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். சோதனை 40 மதிப்பெண்களுக்கு இருக்கும், இதில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment