2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13-ம் தேதி முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஏதாவது ஓர் சான்றிதழை பக்தர்கள் வழங்கினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment