திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க செல்பவர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் போன்ற சில வகையான தரிசனங்களில் சுவாமியை வழிபடுவார்கள்.
அந்தவரிசையில், வி.ஐ.பி. தரிசனமும் உண்டு. இதனையும் தாண்டி 1 நாள் முழு தரிசன சேவை என்ற சேவையை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இதற்கான கட்டணம் தற்போது கோடியை தாண்டியுள்ளது.
அதாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யான உற்சவம் உள்ளிட்ட பல சேவைகளை ஒருநாள் முழுவதும் கோயிலில் இருந்து தரிசனம் செய்யும் உதய அஸ்தமன சேவைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1.கோடி செலுத்த வேண்டும். அதிலும், வெள்ளிக்கிழமையில் தரிசனம் செய்ய விருப்பமெனில் ரூ.1.5 கோடி கட்டணமாக தேவஸ்தானத்திற்கு செலுத்த வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
இப்படி செலுத்தப்படும் நபர் ஆண்டிற்கு 1 முறை என 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உதய அஸ்தமன சேவையில் ஏழுமலையானை வழிபடலாம்.
உதய அஸ்தமன சேவையில் பெறப்படும் இந்த தொகையினை தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பயன்படுத்தப்படும் எனவும், 531 டிக்கெட்டுகள் இந்த சேவைக்காக ஆன்லைனில் கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment