காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பான்குடி வருவாய் கிராமத்தில் அடங்கியது. இங்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட பரப்பளவில் புறம்போக்கு நிலத்தை பல நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிட்டார்.இதனையடுத்து காஞ்சிபுரம் வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் தாசில்தார் , வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றி ரூ. 115 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர். சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
No comments:
Post a Comment