காஞ்சிபுரம் வெள்ள கேட் குபேரபட்டினம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓம் ஸ்ரீ ராஜ குபேர சித்தர் பீடத்தில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் குபேரருக்கு விசேஷ அரியவகை மூலிகைகளை கொண்டு கலசாபிஷேகம் நடைபெற்றது.
காலை விஷேச பூஜையுடன் பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் சந்தன அபிஷேகம் செய்து பூ அலங்காரத்துடன் கூடிய தங்கக் கவசம் செலுத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
குபேரரை தரிசிக்க சென்னை காஞ்சிபுரம் அரக்கோணம் திருப்பதி போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் காணிக்கையாக நவதானியகள் கொண்டு வந்து வழிபட்டனர்.
சிங்கப்பூர் மலேசியா போன்ற ஊர்களில் உள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
குபேரரை தரிசனம் செய்வதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானமும் கொல்லிமலையிலிருந்து எடுக்கப்பட்ட விசேஷ பூஜை பொருள்களும் கோயிலின் சார்பில் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலயத்தில் சித்தர் ராஜ குபேரர் செய்திருந்தார்.
No comments:
Post a Comment