பூவிருந்தவல்லி அருகே கொரட்டூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று உள்ளது.
அந்தக் கல்லூரி தற்போது செயல்படாத நிலையில் விடுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 1200 மகளிர் தங்கி அந்த பகுதியில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். தனியார் விடுதியில் தங்கியிருந்த ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் நச்சு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றுக் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்கள் ஆங்காங்கே உள்ள தனியார் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment