காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் தொடர்ந்து தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு உணவு உட்கொண்ட சுமார் 200-க்கும் மேற்பட்டோர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமணைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 10 நபர்கள் (குறிப்பாக 8 பெண்கள் உட்பட) வீடு திரும்பவில்லை எனவும், 8 பெண்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் யூகித்து ஊழியர்கள் சாலை மறியலில் 10 மணி நேராமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபெரும்புதூர் சென்னை இடையிலான பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
உண்மை நிலைஏதும் இதுவரை தெரியவராத நிலையில் போலீசார் ஊழியர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பெண்கள் 3 குழுக்களாக பிரிந்து போராடி வரும் நிலையில் பெண் போலீசார் குறைபாட்டினால் அவர்களை கட்டுப்படுத்த இயலாமல் தவித்து வருகின்றனர். ஆனால் 1 பெண் இறந்தது உறுதி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து உண்மை நிலை அறிந்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சற்றுமுன் (08.15AM நிலவரப்படி) போலீசார் போராட்டம் நடத்துபவர்களை சாலைகளின் இருபுறங்களிலும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
Related News:👇
No comments:
Post a Comment