கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெறுவதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. முன்னதாக டிசம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிவி குன்னிகிருஷ்ணன்,"நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரின் புகைப்படம் சான்றிதழில் இடம் பெற்றால் என்ன தவறு"என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் பீட்டர் மயலிபரம்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த நடைமுறை மற்ற நாடுகளில் பின்பற்றப்படவில்லை என்றார். அதற்கு நீதிபதி,"மனுதாரருக்கு பிரதமர் ஏன் அவமானமாக தெரிகிறார். மற்ற நாடுகளில் பிரதமர் படம் இடம் பெறவில்லை என்றால், அவர்களுக்கு பிரதமரை குறித்து பெருமிதம் இல்லை போலும்"என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், "தடுப்பூசி சான்றிதழ் தனிநபர் தகவல்கள் குறித்த ஆவணம். அதில் பிரதமரின் புகைப்படத்தை போடுவது தனிநபரின் உரிமையில் தலையீடுவது போன்றது" என விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி,"இந்தியாவில் உள்ள 100 கோடி பேரில் யாருக்கும் இதில் எந்த சிக்கலும் ஏற்படாதபோது, உங்களுக்கு மட்டும் எப்படி அது பிரச்சனையாக இருக்கிறது"எனக் கேட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். 6 வாரங்களுக்குள் அபராதத்தை மனுதாரர் கேரள சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment