வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சுங்குவார்சத்திரத்தில் கல்லுாரி மாணவி தீக்குளித்து தற்கொலை | Sunguvanchathiram Girl Firing | SV Chathiram | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 29, 2021

சுங்குவார்சத்திரத்தில் கல்லுாரி மாணவி தீக்குளித்து தற்கொலை | Sunguvanchathiram Girl Firing | SV Chathiram | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்


காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்ததால், அதிருப்தியடைந்த கல்லுாரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தார். ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரம், சந்தவேலுார் கிராமம் சீனிவாசப் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்.



இவர் மண்ணுார் டாஸ்மாக் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 18 வயது மகள், காஞ்சிபுரம் சங்கரா கலை கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு திருமணம் நடத்த, பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகள், நேற்று முன்தினம் இரவு, மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை மீட்ட சுங்குவார்சத்திரம் போலீசார், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment