செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பஜாரில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா அடகு கடை என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் பின்புறம் துளையிட்ட மர்மநபர்கள் உள்ளே சென்று ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்களை எடுத்துள்ளனர். மேலும் கடையில் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் விட்டு சென்றனர். இதனால் லாக்கரில் இருந்த 200 சவரன் தங்க நகை தப்பியது.
இலத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு கருதி நேற்று 50க்கும் மேற்பட்ட போலீசார் பவுஞ்சூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போலீசார் பலர் அப்பகுதியில் இருந்தபோதிலும் கடையில் துளையிட்டு திருடி சென்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதன் அருகில் உள்ள கடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுவற்றில் துளையிட்டு மற்றொரு அடகு கடையில் 45 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment